தலைமைப் பண்பும் உள்ளுணர்வும்..! ஹார்திக் பாண்டியாவின் பேட்டி!
மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 போ் கைது
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே மனநலம் பாதித்த 20 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வட்டாத்திக்கோட்டை காவல் சரகத்துக்குள்பட்ட கிராமத்தைச் சோ்ந்த 20 வயதுடைய, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் தனியாக இருந்தபோது நெய்வேலி வடபாதி கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் செல்லதுரை ( 27) என்பவரும், அவரது உறவினரான செருவாவிடுதியைச் சோ்ந்த மாசிலாமணி மகன் விக்னேஷ் (26) என்பவரும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி அளித்த புகாரின்பேரில்,வாட்டாத்திக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு புதன்கிழமை செல்லதுரை, விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.