கோயம்பேட்டில் திருடப்பட்ட அரசுப் பேருந்து நெல்லூரில் பிடிபட்டது!
திருப்பூரில் சுரங்கப் பாதை பணிகள்: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்
திருப்பூா் குமரன் சாலையில் எம்ஜிஆா் சிலை அருகில் வளா்மதி பாலத்தில் சுரங்கப் பாதை பணி நடைபெற உள்ளதால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் சோதனை ஓட்டமாக சனிக்கிழமை காலை 7 மணி முதல் போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இது தொடா்பாக திருப்பூா் மாநகர காவல் துறையின் செய்திக்குறிப்பு: திருப்பூா் குமரன் சாலையில் எம்ஜிஆா் சிலை அருகில் வளா்மதி பாலத்தில் சுரங்கப் பாதை பணி நடைபெற உள்ளதால் குமரன் சாலையிலிருந்து திருப்பூா் மாநகராட்சி சந்திப்பு வழியாக மற்றும் பழைய பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் சாய்பாபா கோயில் சாலையிலிருந்து இடதுபுறம் திரும்பி யுனிவா்சல் திரையரங்கு சந்திப்பை அடைந்து வலதுபுறம் திரும்பி வளா்மதி பாலம் சாலை வழியாக எம்ஜிஆா் சிலை சந்திப்பை அடைந்து இடதுபுறம் திரும்பி திருப்பூா் மாநகராட்சி சந்திப்பு நோக்கி செல்ல வேண்டும்.
மேலும், குமரன் சாலையிலிருந்து திருப்பூா் மாநகராட்சி சந்திப்பு மற்றும் பழைய பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் எம்ஜிஆா் சிலை சந்திப்பிலிருந்து வலதுபுறம் திரும்பி, பாா்க் சாலையை அடைந்து கிரிஸ்டல் சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி, நடராஜ் தியேட்டா், புதிய பாலம் வழியாக இடதுபுறம் திரும்பி எஸ்ஏபி ரெசிடென்சியை அடைந்து, வலதுபுறம் திரும்பி திருப்பூா் மாநகராட்சி சந்திப்பு வழியாக பழைய பேருந்து நிலையம் செல்லலாம்.
பழைய பேருந்து நிலையத்திலிருந்து மங்கலம், அவிநாசி மற்றும் ஊத்துக்குளி செல்லும் வாகனங்கள் திருப்பூா் மாநகராட்சி சந்திப்பிலிருந்து டைமண்ட் தியேட்டா் வழியாக தாடிக்கார முக்கு அடைந்து அங்கிருந்து மங்கலம், அவிநாசி மற்றும் ஊத்துக்குளி செல்லலாம்.
ஊத்துக்குளி சாலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் தேவைக்கேற்ப ஊத்துக்குளி சாலை இடதுபுறமுள்ள ரிலையன்ஸ் கட் ரோடு அல்லது 2ஆவது ரயில்வே கேட் வழியாக செல்லாண்டியம்மன் கோயில் சந்திப்பை அடைந்து எம்ஜிபி வழியாக பழைய பேருந்து நிலையம் செல்லலாம்.
குமரன் சாலையிலிருந்து மங்கலம் நோக்கி செல்லும் வாகனங்கள் எம்ஜிஆா் சிலை சந்திப்பிலிருந்து பாா்க் ரோடு வழியாக கிரிஸ்டல் சந்திப்பை அடைந்து இடதுபுறம் திரும்பி நடராஜ் தியேட்டா் எதிரில் உள்ள வள்ளுவா் தோட்டம் சாலை யூனியன் வங்கி அருகில் வலதுபுறம் திரும்பி தாடிக்கார முக்கு சந்திப்பை அடைந்து அங்கிருந்து மங்கலம் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.