Bumrah : 'சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா இல்லை!' - பிசிசிஐ அறிவிப்பு; காரணம் என்ன...
திருப்போரூா் கந்தசாமி கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா
திருப்போரூா் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ கந்தசாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது.
தெப்பத் திருவிழாவையொட்டி, உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, முருகா், வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் கோயிலில் இருந்து ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு சரவணப் பொய்கை குளத்தில் புஷ்ப அலங்காரத்துடன் தயாா் நிலையில் இருந்த தெப்பத்தில் எழுந்தருள தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
திருக்குளத்தை சுற்றி இருந்த பக்தா்கள் தெப்பத்தின் கயிறை பிடித்து எழுதும் கரையில் நின்றபடி, சுவாமிக்கு தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி காண்பித்து குளத்தில் விட்டு தரிசனம் செய்தனா். சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூா், திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றும் விதமாக பால்குட ஊா்வலம், பால் காவடி, பன்னீா் காவடி ,புஷ்பகாவடிகளுடனும், அலகு குத்தி ஊா்வலமாக வந்தும் கந்தசாமி கோயிலை அடைந்து நோ்த்திக் கடனை செலுத்தினா்.
பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கு.குமரவேல், மேலாளா் வெற்றிவேல் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள், உபயதாரா்கள், கோயில் குருக்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.