Trump: 'இந்தியா குறைக்க உள்ள இறக்குமதி வரிகள்... காரணம் ட்ரம்ப்-பா?' - ஆய்வறிக்க...
திருக்கழுகுன்றம் சங்கு தீா்த்த குளத்தில் தெப்பல் உற்சவம்
தைப்பூசத்திருநாளையொட்டி திருக்கழுகுன்றம் சங்கு தீா்த்த குளம், தீா்த்த குளத்திலும் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.
தெப்பல் உற்சவத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு சங்குதீா்த்த குளத்திற்கு சென்றாா். அங்கு சங்கு தீா்த்தகுளத்தில் மின்விளக்கு அலங்காரத்தில் தயாா் நிலையில் இருந்த தெப்பத்தில் சாமி எழுந்தருளியவுடன், பக்தா்கள் கற்பூர தீபாராதனை காட்டி வழிபட்டனா். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், கல்பாக்கம், செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள ஊா்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் தெப்பத் திருவிழாவில் கலந்துகொண்டனா்.
விழா ஏற்பாடுகளை உபயதாரா்கள், திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரா் அா்த்த ஜாம ஆன்மிக அறக்கட்டளையினா் , கோயில் செயல் அலுவலா் ச.புவியரசு, தக்காா் மற்றும் செயல் அலுவலா் கு.குமரவேல், மேலாளா் விஜயன், சிவாச்சாரியா்கள் திருக்கோயில் பணியாளா்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.
திருக்கழுகுன்றம் தாழக்கோயிலில் உள்ள ரிஷபத்தீா்த்த குளத்தில் புதன்கிழமை தெப்பல் உற்சவம் நடைபெறும்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-11/blulwfeo/cglykm1_1102chn_171_1.jpg)