செய்திகள் :

திருமணம் செய்வதாக நகை, பணம் வாங்கி அதிகாரி ஏமாற்றிவிட்டார்: வேலை கேட்டு மனு அளித்த கைம்பெண் தற்கொலை!

post image

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள கூடைத்தூக்கி பகுதியை சேர்ந்தவர் ரமணி(41). இவரது கணவர் அஜிகுமார். குலசேகரம் சந்தை பகுதியில் நகைக்கடை நடத்தி வந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவர்களுக்கு 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் உள்ளார். கணவன் இறந்த பிறகு ரமணி தனது வீட்டுக்கு அருகிலேயே கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் விஷம் குடித்து நேற்று மரணமடைந்தார். குலசேகரம் போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர்.

தந்தை காவல் நிலையத்தில் புகார்

இந்த நிலையில் ரமணி தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதியதாக கூறப்படும் 6 பக்க கடிதத்தை அவரது தந்தை ஜார்ஜ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் ஜார்ஜ் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

என் மகள் ரமணி பி.எஸ்.சி, பி.எட் பட்டதாரி என்பதால் கணவன் மறைவுக்குப்பின் கருணை அடிப்படையில் அரசு வேலை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். அந்த மனுவில் உள்ள மொபைல் எண்ணை எடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பி- பிரிவில் ஆர்.ஐ-ஆக வேலை பார்க்கும் வேல்முருகன் என்பவர் ரமணியைத் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகளைக் கூறி தொடர்பில் இருந்துள்ளார்.

தற்கொலை

ரமணியின் பணம் மற்றும் நகையை வேல்முருகன் வாங்கியதுடன், தனது முதல் மனைவியுடன் வரதட்சனை வழக்கு நடக்கிறது எனவும் அந்த வழக்கு முடிந்தபின் ரமணியை திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.

ரமணி இதை நம்பியிருந்த நிலையில் வேல்முருகன் வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார். தன்னை ஏமாற்றியது பற்றி வேல்முருகன் வீட்டிற்குச் சென்று 14.09.2025 அன்று ரமணி முறையிட்டுள்ளார். வேல்முருகனும், அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் ரமணியைத் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து என் மகள் ரமணி 15.09.2025 அன்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். என் மகள் அனுபவித்த வேதனைகள் குறித்துக் கடிதம் எழுதி வைத்துள்ளார். எனவே வேல்முருகன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்தப் புகாரில் கூறியிருந்தார்.

தற்கொலை செய்துகொண்ட ரமணி

ரமணி எழுதிய கடிதம்

மேலும் ரமணி எழுதிய 6 பக்கம் கொண்ட கடிதமும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளதாவது: "அப்பா நான் இன்று எடுக்கப்போகும் முடிவுக்கு வேல்முருகனும் அவரது குடும்பத்தினரும்தான் காரணம். வேல்முருகனின் மனைவி வேறு ஒருவருடன் சென்றுவிட்டதால் விவாகரத்து வழக்கு முடிந்ததும் என்னை திருமணம் செய்வதாகக் கூறி நகை, பணம் வாங்கினார். இப்போது வேறு பெண்ணை திருமணம் செய்துவிட்டான். அதுபற்றி கேட்டதற்கு என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். அப்பா நீங்கள் எனக்காக நிறைய கஷ்டடப்பட்டீங்க. எந்த அப்பாவும் படாத வலியை அனுபவிச்சீங்க. என்னை மன்னிச்சிடுங்க. என் நகைகள் பீரோவில் இருக்கு. கடை சாவி பேக்கில் இருக்கு..." இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் வேல்முருகனைக் கைது செய்துள்ளனர்.

10 வருட காதலுக்குப் பெண் வீட்டார் எதிர்ப்பு; இளைஞர் ஆணவப் படுகொலை - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

மயிலாடுதுறை அருகே உள்ள அடியமங்கலம் பெரிய தெருவில் வசிப்பவர் குமார். இவருக்கு வைரமுத்து (28) என்ற மகனும் இரு மகள்களும் உள்ளனர். வைரமுத்து டூவீலர் மெக்கானிக். அதே பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது இளம் பெண்.... மேலும் பார்க்க

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தில் திருட்டு; தலைமை அர்ச்சகர் தலைமறைவு

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பலரால் கோயிலுக்கு வெள்ளி குடங்கள், வாளிகள், தாம்பூலங்கள், பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன... மேலும் பார்க்க

காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்த தாய்; மகள் காதலுக்கு எதிர்ப்பு - ஆணவக் கொலை செய்யப்பட்ட இளைஞர்

மயிலாடுதுறை அருகே உள்ள அடியமங்கலம் பெரிய தெருவைச் சேர்ந்த குமார்-ராஜலட்சுமி தம்பதியரின் மகன் வைரமுத்து, டிப்ளமோ படித்தவுடன் டூவீலர் மெக்கானிக் வேலை செய்து வந்தார். அதே பகுதியில் வசித்து வரும் குமார்-வ... மேலும் பார்க்க

குன்னூர்: மலைச்சரிவில் சிசுவுடன் பரிதாபமாக இறந்து கிடந்த கர்ப்பிணி யானை! - என்ன சொல்கிறது வனத்துறை?

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் உள்ள கோழிக்கரை பழங்குடியினர் கிராமத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இருந்து நேற்று மதியம் முதல் கடுமையான துர்நாற்றம் வீசியிருக்கிறது. சந்... மேலும் பார்க்க

ED: யுவராஜ் சிங், உத்தப்பா முதல் நடிகை ஊர்வசி வரை... சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை! - பின்னணி என்ன?

ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் விளம்பரங்கள் தொடர்பான விசாரணையை அமலாக்கத்துறை நாடுமுழுவதும் முடுக்கிவிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களுக்கு வ... மேலும் பார்க்க

6 மாத கண்காணிப்பு; சிக்கிய அஸ்ஸாம் பெண் அதிகாரி: ரெய்டில் ரூ.2 கோடி தங்கம், பணம் பறிமுதல்!

அஸ்ஸாம் சிவில் சர்வீஸ் பிரிவில் அதிகாரியாக இருப்பவர் நுபுர் போரா. தற்போது சர்க்கிள் அதிகாரியாக இருக்கும் நுபுர் போரா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக முதல்வர் அலுவலகத்திற்கு வந்த புகா... மேலும் பார்க்க