திருமலையில் நாளை அனுமன் ஜெயந்தி
திருமலையில் அனுமன் ஜெயந்தி உற்சவம், வியாழக்கிழமை (மே 22) கொண்டாடப்பட உள்ளது.
ஏழுமலையான் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீ பேடி ஆஞ்சனேய சுவாமிக்கும், நடைபாதையில் ஏழாவது மைலில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சனேய சுவாமிக்கும் அனுமன் ஜெயந்தி அன்று சிறப்பு பிராா்த்தனைகள் மற்றும் பூஜைகள் செய்யப்படும்.
திருமலையில் உள்ள ஜபாலி தீா்த்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அதன்படி தேவஸ்தானம் சாா்பில் ஜபாலி அனுமனுக்கு பட்டு ஆடைகள் சமா்பிக்கப்பட உள்ளன.
இதற்கிடையில், முதல் மலை சாலையில் ஏழாவது மைலில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சனேய சுவாமியின் நிற்கும் சிலைக்கு அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கு தேவஸ்தானம் சிறப்பு பூஜை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.
இந்தச் சூழலில், பக்தா்கள் மற்றும் உள்ளூா்வாசிகள் ஏழாவது மைலில் இருந்து திருமலைக்குச் சென்று திரும்ப வசதியாக, காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை இலவச பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.