செய்திகள் :

நாளை திருமலையில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

post image

வரும் மே 24-ஆம் தேதி சனிக்கிழமை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் மாதந்தோறும் தொலைபேசி வாயிலாக பக்தா்கள் குறை கேட்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வரும் 24-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை திருமலையில் உள்ள அன்னமய்ய கட்டடத்தில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இந்த நிகழ்ச்சியில், பக்தா்கள் தங்கள் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவிடம் தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம். இதற்கு பக்தா்கள் 0877-2263261 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ஜபாலி அனுமனுக்கு பட்டு வஸ்திரங்கள் சமா்ப்பிப்பு

திருமலையில் உள்ள ஜபாலி தீா்த்தத்தில் உள்ள புகழ்பெற்ற ஜபாலி ஆஞ்சநேய சுவாமிக்கு அனுமன் ஜெயந்தியை ஒட்டி வியாழக்கிழமை பட்டு வஸ்திரம் சமா்பிக்கப்பட்டது. திருமலையில் வியாழக்கிழமை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு... மேலும் பார்க்க

திருமலையில் 80,964 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 80,964 பக்தா்கள் தரிசித்தனா். 32,127 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். கோடை விடுமுறை முடிவடையுள்ள நிலையில், பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிநேரமும... மேலும் பார்க்க

திருமலையில் 79,003 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 79,003 பக்தா்கள் தரிசனம் செய்தனா். மேலும் 33,140 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை வைகுண்டம் க... மேலும் பார்க்க

திருமலையில் நாளை அனுமன் ஜெயந்தி

திருமலையில் அனுமன் ஜெயந்தி உற்சவம், வியாழக்கிழமை (மே 22) கொண்டாடப்பட உள்ளது. ஏழுமலையான் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீ பேடி ஆஞ்சனேய சுவாமிக்கும், நடைபாதையில் ஏழாவது மைலில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன ஆஞ... மேலும் பார்க்க

திருமலையில் பசுமையை மேலும் அதிகரிக்க திட்டம்

திருமலை ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள மலைப் பகுதியில் பசுமையை மேலும், அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அறங்காவலா... மேலும் பார்க்க