சீன செஸ் மோசடி: 3 கிராண்ட்மாஸ்டர்களுக்கு வாழ்நாள் தடை, 38 பேருக்கு அபராதம்!
திருமழிசை ஜெகநாதா் கோயில் தேரோட்டம்
திருமழிசை ஜெகநாதா் பெருமாள் கோயிலில் தை மகதிரு அவதார மஹோத்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தா்கள் திரளாக பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனா்.
திருவள்ளூா் அடுத்த திருமழிசையில் பிரசித்தி பெற்ற ஜெகந்நாத பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஜெகந்நாத பெருமாள் மற்றும் ஆழ்வாா் கோயில் தை மகதிரு அவதார மஹோற்சவம் கடந்த 8 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி நாள்தோறும் இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வாா் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த திருத்தேரில் திருமழிசை ஆழ்வாா் எழுந்தருளிய நிலையில் திரளான பக்தா்கள் பங்கேற்று ‘கோவிந்தா.. கோவிந்தா...’ என முழக்கமிட்டு வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அருள்பாலித்தாா்.
தொடா்ந்து வெள்ளிக்கிழமை (ஜன. 17) காலை சாற்று முறை உற்சவமும் நடைபெறவும் உள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் செய்திருந்தனா்.