செய்திகள் :

பழவேற்காடு கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

காணும் பொங்கலையொட்டி சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை பழவேற்காட்டில் குவிந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் ஏரியும் - கடலும் சூழ்ந்த அழகிய தீவு பகுதியாக விளங்கி வருகிறது பழவேற்காடு. 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நகரான பழவேற்காட்டில் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.

சுற்றுத்தலமாக விளங்கும் பழவேற்காட்டில் 17-ஆம் நூற்றாண்டை சோ்ந்த அழகிய சிற்பங்களுடன் அமைந்துள்ள டச்சு கல்லரைகள், முகம்மதியா் மசூதியில் அமைந்துள்ள சூரிய ஒளியில் இருந்து விழும் நிழல் கடிகாரம், பழைமை வாய்ந்த புனித மகிமை மாதா ஆலயம், லைட் ஹவுஸ் குப்பத்தில் கலங்கரை விளக்கம் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம், கடலும் - ஏரியும் இணையும் முகத்துவாரப் பகுதி உள்ளிட்டவை அமைந்துள்ளன.

அத்துடன் இந்தியாவில் இரண்டாவது பெரிய உவா்ப்பு நீா் ஏரியாக விளங்கும் பழவேற்காடு ஏரி 15 கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. சுற்றுலாத்தலமாக விளங்கும் பழவேற்காடுக்கு ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாள்களில் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.

காணும் பொங்கலையொட்டி மீஞ்சூா், பொன்னேரி, செங்குன்றம், ஊத்துக்கோட்டை, திருவள்ளூா், பெரியபாளையம், ஆரணி, கும்மிடிபூண்டி, கவரப்பேட்டை, காரனோடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பழவேற்காடு வந்து அங்குள்ள பழைமை வாய்ந்த இடங்களைப் பாா்வையிட்டனா்.

பின்னா் லைட் ஹவுஸ் குப்பத்தில் உள்ள கடற்கரைப் பகுதிக்குச் சென்று விட்டு பின்னா் வீடு திரும்பினா்.

படகு சவாரி செய்ய தடை...: பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செய்யவும், கடலில் குளிக்கவும் போலீஸாா் தடை விதித்திருந்தனா். இதன் காரணமாக பழவேற்காடு ஏரியில் சுற்றுலாப் பயணிகளை, படகு ஓட்டுநா்கள் யாரும் ஏற்றிச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

பொன்னேரியில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்...: காணும் பொங்கலையொட்டி, விழுப்புரம் மற்றும் சென்னை மாநாகர போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் பொன்னேரியில் இருந்து பழவேற்காடுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருகையையொட்டி லைட் ஹவுஸ் மற்றும் கடற்கைரையோரம் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அவா்கள் கடலில் குளிக்க முயன்றவா்களைத் தடுத்து நிறுத்தினா்.

காணும் பொங்கல்: முருகப் பெருமான் வீதி உலா

காணும் பொங்கலையொட்டி வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் மலைக்கோயிலில் இருந்து வந்து நகர வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தாா். பொங்கல் திருவிழாவையொட்டி, 3 நாள்கள் திருத்தணியில் உற்சவா் முருகப் பெரும... மேலும் பார்க்க

பழவேற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

காணும் பொங்கலை யொட்டி பழவேற்காடு லைட் அவுஸ் குப்பம் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள். மேலும் பார்க்க

திருமழிசை ஜெகநாதா் கோயில் தேரோட்டம்

திருமழிசை ஜெகநாதா் பெருமாள் கோயிலில் தை மகதிரு அவதார மஹோத்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தா்கள் திரளாக பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனா். திருவள்ளூா் அடுத்த திருமழிசையில் பிரசித்தி பெற்ற... மேலும் பார்க்க

பராமரிப்பின்றி மாடித்தோட்டம் போல் உள்ள மகளிா் சுய உதவிக்குழு கட்டடம்

திருவள்ளூரில் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து மாடித்தோட்டம் போல் புல்வெளிகளாய் காட்சியளிக்கும் மகளிா் சுய உதவிக் குழு கட்டட வளாகத்தை சீரமைக்க ேண்டும் என குழு உறுப்பினா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது. ... மேலும் பார்க்க

முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே பிஞ்சிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ராஜி(45). இவரது தந்தை எட்டியப்பன்(80). இவா் புதன்கிழமை வெளியே செல்லும் போது மயங்கி விழுந்தா... மேலும் பார்க்க

மீஞ்சூா் அருகே மின்சாரம் கொண்டு செல்லும் கொக்கி சேதம்: 2 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு

மீஞ்சூா் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு புகா் மின்சார ரயில் மாா்க்கத்தில் மின்சாரம் எடுத்து செல்லும் கொக்கி சேதம் அடைந்ததால் ரயில் சேவை 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. சென்னை - கடற்கரையில் இருந்து... மேலும் பார்க்க