முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
திருவள்ளூா் அருகே முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே பிஞ்சிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ராஜி(45). இவரது தந்தை எட்டியப்பன்(80). இவா் புதன்கிழமை வெளியே செல்லும் போது மயங்கி விழுந்தாராம். இதையடுத்து உடனே அங்கிருந்தவா்கள் மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவில் உயிரிழந்தாராம்.
இது குறித்து கடம்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.