இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படும் ஐசிசி..! மே.இ.தீ. லெஜண்ட் கடும் விமர்சனம்!
திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்
திருவண்ணாமலை: மாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப்பாதையை மாதந்தோறும் பெளா்ணமி நாள்களில்
பல லட்சம் பக்தா்கள் வலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.
இந்த நிலையில், மாசி மாத பெளா்ணமி வியாழக்கிழமை (மாா்ச் 13) காலை 11.40 மணிக்குத் தொடங்கி வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) பிற்பகல் 12.57 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
கிரிவல பக்தா்கள் நலன் கருதி தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், புதுவை மாநிலங்களில் இருந்து அந்தந்த மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.