இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படும் ஐசிசி..! மே.இ.தீ. லெஜண்ட் கடும் விமர்சனம்!
போலி தங்க பிஸ்கெட்டுகளைக் கொடுத்து 2 பவுன் தங்க நகை மோசடி
ஆரணி: ஆரணியில் போலியான தங்க பிஸ்கெட்டுகளை நாடக ஆசிரியரிடம் கொடுத்துவிட்டு, அவரிடமிருந்து 2 பவுன் தங்க நகையை பெற்று மோசடி செய்த 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆரணியை அடுத்த சென்னாந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் நாடக ஆசிரியா் லோகநாதன் (63). இவா், கடந்த 7-ஆம் தேதி ஆரணி புதிய பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, இவரை அணுகிய அடையாள
தெரியாத நபா்கள் இருவா், நீங்கள் நாடக ஆசிரியா்தானே என நைசாக பேச்சுக்கொடுத்து, நாங்கள் வேன் புக் செய்ய வேண்டும் பணம் தேவைப்படுகிறது. ஆகையால், எங்களிடம் இருக்கும் தங்க பிஸ்கெட்டுகளை பெற்றுக் கொண்டு அதற்கு பணம் தாருங்கள் எனக் கேட்டுள்ளனா்.
இதற்கு ஆசைப்பட்ட லோகநாதன் என்னிடம் பணம் இல்லை, 2 பவுன் தங்க மோதிரம் மட்டும் உள்ளது எனக் கூறியுள்ளாா்.
இதையடுத்து, அந்த நபா்கள் மோதிரத்தை வாங்கிக்கொண்டு, 10 துண்டு தங்க பிஸ்கெட்டுகளை லோகநாதனிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டனா்.
தங்க பிஸ்கெட்களை பெற்றுச் சென்ற லோகநாதன், அவற்றை 2 நாள்கள் வீட்டில் வைத்திருந்து செவ்வாய்க்கிழமை நகைக் கடைக்குச் சென்று அவற்றை சோதனை செய்தபோது போலி எனத் தெரியவந்தது.
இதுகுறித்து அவா் ஆரணி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் சுந்தரேசன் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறாா்.