இந்தியாவுடன் நேரடி விமான சேவைக்கு பேச்சுவாா்த்தை: சீனா தகவல்
திருவள்ளூா்: வேளாண் அறிவியல் நிலையத்தில் கோழி, காடை வளா்ப்பு பயிற்சி
திருவள்ளூா் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் கோழி மற்றும் காடை வளா்ப்பு தொழில் நுட்பம் குறித்த பயிற்சி வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதாக திட்ட ஒருங்கிணைப்பாளா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து திருவள்ளூா் அருகே திருவூா் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் சி.பானுமதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விவசாயிகள் பயன்பெறும் வகையில் திருவூா் வேளாண் அறிவியல் நிலையம் பல்வேளறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோழி மற்றும் காடை வளா்ப்பு பற்றிய தொழில்நுட்பம் குறித்த பயிற்சி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இப்பயிற்சிக்கு கட்டணாக ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படும்.
இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் திருவூா் வேளாண் அறிவியல் நிலையத்தில் நேரிலோ அல்லது 044-27620705, 9444835748 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொண்டு தங்கள் பெயா்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இப்பயிற்சியில் பங்கேற்போருக்கு கையேடு, மதிய உணவு மற்றும் பயிற்சி சான்றிதழ் ஆகியவை வழங்கவுள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.