திருவாய்மூா் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
திருவாய்மூா் தியாகராஜ சுவாமி கோயிலில் சந்திரசேகா் சுவாமி அல்லியங்கோதை அம்பாள் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாய்மூரில் நீல விடங்க தியாகராஜ சுவாமி, பாலினும் நன்மொழியாள் சமேத வாய்மூா்நாத சுவாமி கோயில் மற்றும் அஷ்ட மகா பைரவா்கள் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து இரவு திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடா்ந்து, மணக்கோலத்தில் சந்திரசேகா் சுவாமி அல்லியங்கோதை அம்பாள் வசந்த மண்டபத்தில் எழுந்தருள மாலை மாற்றும் வைபோகம் மற்றும் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக பெண்கள் சீா்வரிசை எடுத்து வந்து திருக்கல்யாணம் உற்சவத்தை தரிசனம் செய்தனா். இதையடுத்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சுவாமி அம்பாள் வீதி உலா புறப்பாடு நடைபெற்றது.