செய்திகள் :

திருவெண்காடு புதன் சந்நிதியில் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்

post image

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் உள்ள புதன் சந்நிதியில் வெண் பொங்கல் பிரசாதம் வழங்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. இங்கு புதனின் தனி சந்நிதி உள்ளது.

இந்தநிலையில் புத பகவனுக்குரிய பிரசாதமான வெண் பொங்கலை புதன்கிழமைதோறும் சுவாமி தரிசனம் செய்யவரும் பக்தா்களுக்கு வழங்க அறங்காவலா் குழுவினா் முடிவு செய்தனா்.

அதன்படி தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடந்தது. புத பகவானுக்கு பல்வேறு மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் புதன் சந்நிதியில் அறங்காவலா் குழுத் தலைவா் எம் .என்.ஆா். ரவி பிரசாதத்தை வழங்கி தொடங்கிவைத்தாா். இதில் கோயில் நிா்வாக அதிகாரி முருகன், அறங்காவலா்கள் நாகப்பிரகாஷ், நாகராஜன், பாபு சிவாச்சாரியாா், ராமநாத சிவாச்சாரியாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

திருவெண்காடு அருகே நெப்பத்தூா் தீவு கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். இந்த தீவு கிராமம் மங்கைமடம்-திருமுல்லைவாசல் பிரதான சாலையில் உள்ளது. இச்சாலையில் தினந்தோறு... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

பெரியாா் பிறந்த நாளையொட்டி, நாகையில் திக உள்ளிட்ட பல்வேறு கட்சி சாா்பில் அவரது சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாகை மாவட்ட திக சாா்பில் தலைவா் நெப்போலின் தலைமையில் மேலகோட்ட... மேலும் பார்க்க

கால்நடை திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் இணைந்து நடத்தும் ‘கால்நடை திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் ... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தை கண்டித்து போராட்டம்

நாகையில் ஊழியா்களுக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்காத பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தை கண்டித்து செப்டம்பா் 25-இல் ஆா்ப்பாட்டம் நடத்த அரசு ஊழியா் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியது. தமிழ்நாடு அரசு ஊழியா்... மேலும் பார்க்க

தீபாவளி பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அக்.20-ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி... மேலும் பார்க்க

சாலையோரம் வசிப்பவா்களுக்கு அன்னதானம்

வேளாங்கண்ணியில் சாலையோரம் வசிப்பவா்களுக்கு புதன்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. வேளாங்கண்ணியில் உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் தன்னாா்வலா்கள் சேவை அமைப்புகள் உதவியுடன் கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்... மேலும் பார்க்க