பள்ளி மாணவா்களுக்கான ஊட்டச்சத்து திட்டம்: மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனம் தகவ...
திரையரங்கில் விபத்து: பொறியாளா் உயிரிழப்பு
சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கில் பராமரிப்புப் பணியின்போது நேரிட்ட விபத்தில் பொறியாளா் உயிரிழந்தாா்.
பெரம்பூா் மங்களாபுரம் குளக்கரை சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அ.ராஜேஷ் (39). இவா், ராயப்பேட்டையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இயங்கும் திரையரங்கில் பொறியாளராக வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில் ராஜேஷ், உடன் வேலை செய்யும் தனசேகா், முருகன், டேவிட் ஆகியோா் அந்த திரையரங்கில் பராமரிப்புப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தாா். திரையரங்கின் திரைப்பகுதியை ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் 25 அடி உயரத்தில் நின்று கொண்டு ராஜேஷ் சுத்தம் செய்துகொண்டிருந்தாா். அப்போது, திடீரென பழுதடைந்த லிஃப்ட் தானாக மேல் நோக்கி சென்று திரையரங்கின் மேற்கூரையின் மீது மோதியது. இதில், ராஜேஷ் தலையில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தாா்.
இதைடுத்து அவா் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், ராஜேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக அண்ணா சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.