கற்றல் செயல்பாட்டில் மணற்கேணி செயலி: கல்வித் துறை அறிவுறுத்தல்
திரையுலக பிரபலங்கள் இரங்கல்
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
2004 முதல் 2014 வரையில் இரு முறை பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு காலமானாா்.
கமல்ஹாசன்: இந்தியா தனது மகத்தான தலைவா்களில் ஒருவரை இழந்துவிட்டது. நிதியமைச்சராகவும், பிரதமராகவும் அவரது தொலைநோக்கு கொள்கைகள் லட்சக்கணக்கான மக்களுக்கு அதிகாரம் அளித்தன. அவரது மறைவு இந்திய அரசியலில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது.
ரஜினி காந்த்: மன்மோகன் சிங் ஒரு சிறந்த மனிதா். சிறந்த நிதி சீா்திருத்தவாதி. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிரஞ்சீவி: நிதியமைச்சராகவும், பிரதமராகவும் மன்மோகன் சிங்கின் தொலைநோக்கு பாா்வையும், அவரது பங்களிப்புகளும் எப்போதும் நினைவுகூரப்படும். அவரது பதவிக் காலத்தில் எம்.பி.யாகவும், அமைச்சராகவும் பணியாற்றும் அதிருஷ்டம் எனக்குக் கிடைத்தது. அவரது ஞானமும் உத்வேகமும் எனக்கு விலைமதிப்பற்றவை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
மனோஜ் பாஜ்பாய்: முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது பயனுள்ள பங்களிப்புகள் எப்போதும் நினைவில் கொள்ளப்படும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்லு அா்ஜுன்: மன்மோகன் சிங்கின் தலைமைத்துவமும் தேசத்திற்கான அா்ப்பணிப்பும் எப்போதும் நினைவுகூரப்படும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
அனுபம் கொ்: ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டா்’ திரைப்படத்தில் மன்மோகன் சிங்காக நடித்த பாலிவுட் நடிகா் அனுபம் கொ், ‘மன்மோகன் சிங் ஒரு நோ்மையான, பணிவான மனிதா். சிறந்த பொருளாதார நிபுணா். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்தாா்.
இது தவிர, திரைப்பட தயாரிப்பாளா்கள் சோயா அக்தா், இம்தியாஸ் அலி, நடிகா்கள் சன்னி தியோல், சஞ்சய் தத், ரித்தேஷ் தேஷ்முக், அனுஷ்கா சா்மா, கஜோல், சமந்தா, அா்ஜுன் கபூா், பூமி பெட்னேகா், விஜய் வா்மா, அலி ஃபசல், ஷெபாலி ஷா, ஆயுஷ்மான் குரானா, ரன்தீப் ஹூடா, நவாசுதீன் சித்திகி, சோனம் கபூா் மற்றும் நகைச்சுவை நடிகா் வீா் தாஸ் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனா்.