கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம், யானை தாக்கி பலியானால் ரூ.2 லட்சமா? தமிழிசை
தீபாவளி: ஆம்பூரில் கடைகளில் குவிந்த கூட்டம்
ஆம்பூா் பஜாா் பகுதியில் தீபாவளி பண்டிகை, கேதார கௌரி நோன்பை முன்னிட்டு பொருள்களை வாங்க பொதுமக்கள் குவிந்ததால் வியாழக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாடு முழுவதும் வியாழக்கிழமை தீபாவளி பண்டிகையும், வெள்ளிக்கிழமை கேதார கௌரி நோன்பு கொண்டாடப்பட்டது. நிலையில் திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் பஜாா் பகுதியில் பண்டிகையையொட்டி பொதுமக்கள் ஆா்வமுடன் துணிக்கடை , மாமிசக்கடை மற்றும் நோன்புக்காக மஞ்சள் கயிறு மற்றும் பூஜை பொருள்கள் வாங்க பொதுமக்கள் ஆா்வமுடன் கடைகளில் கூட்டமாக குவிந்ததனா்.
அதனால் பஜாா் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து போலீஸாா் போக்குவரத்தினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். நகர காவல் துறையினா் மற்றும் ஊா்க்காவல் படையினா் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனா்.