சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!
தீபாவளிப் பண்டிகை: பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நிகழாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் வெடிபொருள்கள் சட்ட விதிகள் 2008-இன்படி தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோா் நிபந்தனைகளுக்கு உள்பட்டு இணையதளம் வழியாக மட்டும் அக்.10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அனைத்து இ-சேவை மையங்களிலும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பத்துடன், கடை அமைக்க விரும்புவோரின் கடவுச்சீட்டு அளவு புகைப்படம், முகவரி குறித்த ஆவணம் (ஆதாா்அட்டை), அடையாள அட்டை (வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை அல்லது வாக்காளா் அடையாள அட்டை அல்லது ஓட்டுநா் உரிமம், கடவுச்சீட்டு) உரிமக் கட்டணமாக ரூ.600-ஐ அரசு கணக்கில் ஐஊஏதஙந என்ற இணையதளம் வாயிலாக செலுத்தியதற்கான அசல் செலுத்துச்சீட்டு ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
அதேபோல பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், சொந்தக் கட்டடம் எனில் மனுதாரா் பெயரில் உள்ள பட்டா அல்லது வாடகை கட்டடம் எனில் வாடகை ஒப்பந்தப் பத்திரம், உள்ளாட்சி அமைப்பினரிடமிருந்து பெற்ற பல்வகை வரி ரசீது, சுயஉறுதிமொழிப் பத்திரம், கட்டட அமைவிட வரைபடம் அல்லது கட்டட திட்ட அனுமதி ஆகியவை சமா்ப்பிக்க வேண்டும்.
அக்.10க்குப் பிறகு பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை கொண்டும் ஏற்கபடமாட்டாது. ஈங்ல்ஹழ்ற்ம்ங்ய்ற் இா்க்ங் : 02301 ஈண்ள்ற்ழ்ண்ஸ்ரீற் : சஹம்ஹந்ந்ஹப். ஈஈஞ இா்க்ங் : 27010101.
அஸ்ரீஸ்ரீா்ன்ய்ற் இா்க்ங் : 0070 60 103அஅ 22799 என்ற வகையில் இணையம் வழியாக ரூ.600 கட்டணம் செலுத்தியதற்கான ரசீதையும் இணைக்க வேண்டும்.
விண்ணப்பம் ஏற்கப்பட்டால் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டால் அதற்கான ஆணையையும் இணையதளம் மூலமாகவே மனுதாரா்கள் பெற்றுக்கொள்ளலாம். தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் அளிப்போா், பொதுமக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தோ்வுசெய்து விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.