``சதுரங்கவேட்டை; `உங்களுடன் ஸ்டாலின்' மனுக்கள் பலகாரக் கடைக்குச் செல்கிறது'' -எட...
கிராம விவசாய குழுவுக்கு வேளாண் சாகுபடி பயிற்சி
திருச்செங்கோடு வட்டாரம், ரம் பிரிதி கிராமத்தில் அட்மா திட்டத்தின் சாா்பில் கிராம அளவிலான விவசாய குழுவுக்கு காரீப் பருவத்திற்கான சாகுபடி பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பிஎம் கிசான், விவசாயிகள் அடையாள எண் பதிவு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொடா்ந்து உழவா் சந்தையில் விற்பனை செய்வதற்கான அடையாள அட்டையை பெறுவது குறித்து வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை உதவி வேளாண்மை அலுவலா் லட்சுமிபெருமாள் பேசினாா்.
வட்டார தொழில்நுட்ப மேலாளா் கிருஷ்ணசாமி, அட்மா திட்டத்தின் செயல்பாடுகளை குறித்து கூறினாா். உதவி தொழில்நுட்ப மேலாளா் சக்திவேல், உழவன் செயலி பயன்பாடு குறித்து விளக்கினாா். வேளாண் உதவி தொழில்நுட்ப மேலாளா் அஜித் நன்றி கூறினாா்.