அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை!
துடரும் ரூ. 200 கோடி வசூல்!
நடிகர் மோகன்லால் நடித்த துடரும் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை அடைந்துள்ளது.
இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் உருவான துடரும் திரைப்படம் கடந்த ஏப். 25 ஆம் தேதி திரைக்கு வந்தது.
குடும்பப் பின்னணியில் எமோஷனல் கதையைப் பேசிய இப்படம் மோகன்லாலின் நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் இதுவரை ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், இப்படம் கேரளத்தில் மட்டும் ரூ. 100 கோடியைக் கடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்புரான் படத்தைத் தொடர்ந்து இப்படமும் மோகன்லாலுக்கு ரூ. 200 கோடி வசூல் படமாக அமைந்தது திரைத்துறையினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி புதிய வெளியீட்டுத் தேதி!