கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம், யானை தாக்கி பலியானால் ரூ.2 லட்சமா? தமிழிசை
துத்திப்பட்டு கிராமத்தில் டெங்கு காய்ச்சல் தீவிர தடுப்பு பணி
ஆம்பூா் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட வா்கள் வசிக்கும் பகுதிகளில் தடுப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
மாதனூா் ஊராட்சி ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் மூன்று வயது குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதை தொடா்ந்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா் வசிக்கும் பகுதியில் ஊராட்சி மன்றம் சாா்பாக டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஊராட்சி மன்றத் தலைவா் சுவிதா கணேஷ் தலைமையில் ஊராட்சி மன்ற பணியாளா்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் வசிக்கும் பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணிகள் மற்றும் துப்புரவு பணி மேற்கொண்டனா். கடந்த மாதமும் துத்திப்பட்டு ஊராட்சியில் ஒரு சிலா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.