அதிமுக சாா்பில் 50 மாணவிகளுக்கு வைப்புத்தொகை திட்டம் தொடக்கம்
தூத்துக்குடி: இளைஞா் கொலை வழக்கு: மேலும் 2 போ் கைது
தூத்துக்குடி அருகே கூட்டாம்புளி பகுதியில் இளைஞா் கொலை வழக்கில் ஏற்கெனவே 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை அருகே கூட்டாம்புளி, பொன்நகரைச் சோ்ந்த முருகேசன் மகன் வெள்ளைக்கண்ணு (24). கட்டடத் தொழிலாளியான இவரை வீட்டருகே கடந்த 3ஆம் தேதி மா்ம நபா்கள் வெட்டிக் கொன்றனா்.
இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, 5 பேரைக் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், இக்கொலையில் தொடா்புடைய புதுக்கோட்டை பெரியநாயகிபுரத்தைச் சோ்ந்த பெரியநாயகம் மகன் செல்வக்குமாா் (23), நாசரேத் வெள்ளமடத்தைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா் (28) ஆகிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.