செய்திகள் :

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; கைவிட மறுப்பு - வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞர்

post image

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு மாயாண்டி கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகேஷ். கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி இரவில் வல்லநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மது வாங்கிக் கொண்டு அக்கடையில் அருகில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அரிவாளுடன் வந்த ஒருவர் முருகேஷை வெட்ட முயன்றார். சுதாரித்துக்  கொண்ட முருகேஷ், அவரிடமிருந்து தப்பியோடினார்.

கொலை செய்யப்பட்ட முருகேஷ்

இருப்பினும் முருகேஷை அவர், ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர், டாஸ்மாக் கடை முன்பு மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி முருகேசஷை வெட்டிய நபரை கடந்த 2 நாட்களாக தேடி வந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த கொம்பையா என்பவர்தான் முருகேஷை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து கொம்பையாவை போலீஸார் கைது செய்தனர். போலீஸாரின் விசாரணையில், “என் வீடு டாஸ்மாக் கடை இருக்கும் தெருவில் உள்ளது. நான் வெளியூரில் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறேன். நானும் எனது மனைவியும் சிறு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறோம். முருகேஷ் தினமும் டாஸ்மாக் கடைக்கு வரும் போது என் மனைவியிடம் எப்படியோ பேசி பழகியுள்ளார்.

டாஸ்மாக் கடை

நாளடைவில் அப்பழக்கம் திருமணம் தாண்டிய உறவாக மாறிவிட்டது. இதையறிந்த நான், முருகேஷை அழைத்து மனைவியுடனான பழக்கத்தை கைவிடும் படி கூறினேன். ஆனாலும், தொடர்ந்து பழகி வந்துள்ளார். கடந்த 17-ம் தேதி இரவு டாஸ்மாக் கடை அருகில் மது அருந்திக் கொண்டிருந்த முருகேஷை சந்தித்தேன். இது வரைக்கும் நடந்ததை விட்டுவிடு இனிமேல் என் மனைவியுடன் பழக வேண்டாம் எனக் கூறினேன். அதற்கு முடியாது என திமிராகப் பேசினார். இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. உடனே வீட்டிற்குச் சென்று அரிவாளை எடுத்து வந்து முருகேஷை வெட்டினேன்.” எனக் கூறியுள்ளார்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

'இது எங்க குழந்தைகளுடைய எலும்புத் துண்டுகள்' - 2 குழந்தைகள் கொன்று புதைத்த இளம்பெண் காதலனுடன் கைது

கேரள மாநிலம் திருச்சூர் புதுக்காடு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு இளைஞர் ஒருவர் சென்றார். மது போதையில் இருந்த அந்த இளைஞர் ஆம்பல்லூரைச் சேர்ந்தவர் எனவும், தனது பெயர் பபின்(25) என்றும் கூறினார்... மேலும் பார்க்க

அமெரிக்காவில் மாயமான இந்திய பெண்; ஆங்கிலம் தெரியாது, திருமணத்துக்காக சென்ற இடத்தில் பரிதாபம்

இந்தியாவைச் சேர்ந்த 24 வயது பெண் அமெரிக்காவில் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்காக அமெரிக்கா வந்ததாகக் கூறப்படும் இவர், சில நாள்களிலேயே மாயமாகியிருக... மேலும் பார்க்க

`18 ஏக்கர் சொத்து உள்ளது' - சோசியல் மீடியாவில் அறிமுகமான நபரை திருமணம் செய்து கொன்ற பெண்

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பத்வார் என்ற கிராமத்தை சேர்ந்தவர் இந்திரகுமார். பகுதி நேரமாக ஆசிரியர் வேலை செய்து கொண்டு விவசாயமும் செய்து வந்தார். அவருக்கு சொந்தமாக 18 ஏக்கர் நிலம் இ... மேலும் பார்க்க

`பாக்கி 200 பவுன்?’ - ஏப்ரலில் திருமணம்; ஜூனில் இளம்பெண் தற்கொலை - திருப்பூரில் வரதட்சணை கொடூரம்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபுதூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி ஜெயசுதா. மகள் ரிதன்யா (27). ரிதன்யாவுக்கும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்... மேலும் பார்க்க

``மாமியார் வீட்டில் மரியாதை இல்லை..'' - மனைவியை கொலை செய்த கணவர் பகீர் வாக்கு மூலம்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் படுவூர் காட்டுவழி பகுதியைச் சேர்ந்தவர் டார்வின்(46). கூலி தொழிலாளி. இவரது மனைவி பபிதா நித்யசெல்வி(39). இவர்களுக்கு பென்குரூஸ்(9) என்ற மகனும், டிக்... மேலும் பார்க்க

Yash Dayal: "திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்" - RCB வீரர் யஷ் தயாள் மீது இளம்பெண் புகார்

இந்தாண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்.சி.பி அணியில் கடந்த இரண்டாண்டுகளாக முக்கிய பவுலராகத் திகழும் யஷ் தயாள், திருமணம் செய்வதாகக் கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாக உத்தரப்பிரதேச பெண் ஒருவர் புகாரளித்தி... மேலும் பார்க்க