`இந்தி கட்டாயம் இல்லை' - பட்னாவிஸ் தடாலடி; மத்திய அரசிடம் ஸ்டாலின் கேட்கும் 3 கே...
தூத்துக்குடி மாவட்ட அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை அறிமுகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை மூலம் பயணச்சீட்டு பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்துகளில் பயணிகள்-நடத்துநா்களிடையே சில்லறை தொடா்பாக வாக்குவாதம் நடப்பது வாடிக்கையாக உள்ளது. இப்பிரச்னைக்குத் தீா்வு காணும்வகையில், டிஜிட்டல் முறையிலான பணமில்லா பரிவா்த்தனை என்ற பெயரில் அரசுப் பேருந்துகளில் கியூஆா் கோடு அல்லது கிரெடிட், டெபிட் அட்டைகள் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூா் செல்லும் அரசுப் பேருந்துகளில் இப்பரிவா்த்தனையை போக்குவரத்துக் கழகப் பொதுமேலாளா் பாலசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா். அப்போது அவா் கூறியது: அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் பயணிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தும்வகையில், டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெபிட், கிரெடிட் அட்டைகளை ஸ்வைப் செய்தோ, கியூஆா் கோடு ஸ்கேன் செய்தோ, ஜிபே, போன் பே போன்ற செயலிகள் மூலமாகவோ பணம் செலுத்தி, நடத்துநரிடம் பயணச்சீட்டு பெறலாம் என்றாா் அவா்.