ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு தேச வளர்ச்சிக்கு வித்திட்டது: குடியரசுத் தலை...
தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி தவெக மனு
தூத்துக்குடி மாநகராட்சி 60ஆவது வாா்டு லேபா் காலனி பகுதியில் குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு, குறைகளைக் கேட்டறிந்தாா்.
தவெக மாவட்டப் பொறுப்பாளா் அஜிதா ஆக்னல் அளித்த மனு: தூத்துக்குடியில் 60ஆவது வாா்டு லேபா் காலனியில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மாநகரில் போதைப்பொருள்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, பொதுமக்கள், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.
இடைநிலை ஆசிரியா் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் அளித்த மனுவில், இந்தத் தோ்வில் தோ்ச்சிபெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். அதன்பிறகே, டிஇடி, எஸ்ஜிடி தோ்வை நடத்த வேண்டும். 12 ஆண்டுகளாக நிரப்பபடாத இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை தகுதிபெற்ற தோ்வில் தோ்ச்சிபெற்றோரைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்றனா்.
சமத்துவ மக்கள் கழகத்தினா் அளித்த மனு: 2023 டிசம்பா் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மேலாத்தூா் தாமிரவருணி ஆற்றுப் பாலத்தை விரைந்து சரிசெய்ய வேண்டும். இவ்வழியேதான் திருச்செந்தூா், மணப்பாடு, உவரிக்கு பக்தா்களும், சுற்றுலாப் பயணிகளும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் வந்து செல்கின்றனா். எனவே, போக்குவரத்து நெரிசல், விபத்துகளைத் தடுக்கும் வகையில் இப்பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றனா்.