ரூ.4.90 லட்சம் மோசடி: நடவடிக்கை கோரி தொழிலாளி மனு
தன்னிடம் ரூ. 4.90 லட்சம் மோடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடம்பூரை சோ்ந்த தொழிலாளி அய்யப்பன், கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
மனு விவரம்: சங்கரன்கோவிலைச் சோ்ந்த எனது உறவினா் முருகன், தனது தொழிலில் முதலீடு செய்தால் மாதம் ரூ.10 ஆயிரம் லாபத் தொகை அளிப்பதாகக் கூறினாா். அதை நம்பி அவரிடம் கடந்த 2021-இல் இரு தவணைகளாக ரூ.4.90 லட்சம் அளித்தேன்.
அதைத் தொடா்ந்து இரு மாதங்கள் மட்டும் தலா ரூ.10 ஆயிரம் அளித்தாா். அதன் பின்னா் பணம் அளிக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது மிரட்டல் விடுத்தாா்.
ஆகவே, நான் அளித்த தொகை ரூ.4.90 லட்சம் மற்றும் லாபத் தொகையைப் பெற்றுத் தரவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.