வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி: முக்தாா் அப்பாஸ...
விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை, மின்னல் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தாா்.
விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி. லாரி ஓட்டுநா். இவரது மகள் முத்து கௌசல்யா (17). விளாத்திகுளத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்த இவா், அரசு பொதுத் தோ்வு எழுதியிருந்தாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகலில் எட்டயபுரம், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்று, இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. அப்போது, வீட்டருகே காயவைத்திருந்த மிளகாய்ப் பழங்களை எடுக்கச் சென்ற முத்துகௌசல்யா மீது மின்னல் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், விளாத்திகுளம் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.