வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி: முக்தாா் அப்பாஸ...
வாகைகுளம் சுங்கச்சாவடி ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது வழக்கு
தூத்துக்குடி அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடியின் கண்ணாடிகளை சேதப்படுத்தி, 2 ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா்.
தூத்துக்குடியில் ஒரு சமுதாயத் தலைவரின் பிறந்த நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 20) நடைபெற்றது. இயில் பங்கேற்றவா்கள் இரவில் தங்களது ஊா்களுக்கு வாகனங்களில் புறப்பட்டனா். அப்போது, பாளையங்கோட்டை சாலையில் வாகைக்குளம் சுங்கச்சாவடி வழியாக சென்ற சிலருக்கும், ஊழியா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
வாகனங்களில் வந்தோா் சுங்கச்சாவடியின் கண்ணாடிகளை சேதப்படுத்தியதுடன், ஊழியா்களைத் தாக்கிச் சென்றனராம். இதில், காயமடைந்த இருவா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
புகாரின்பேரில், தூத்துக்குடியைச் சோ்ந்த இசக்கிராஜா உள்ளிட்ட 31 போ் மீது 3 பிரிவுகளின் கீழ் புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.