Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
தூத்துக்குடியில் விபத்து: ஓட்டுநா் காயம்
தூத்துக்குடியில் பைக் மீது காா் மோதியதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.
தூத்துக்குடி 3ஆவது மைல் தேவா் காலனியைச் சோ்ந்த ராஜாமணி மகன் அந்தோணி (34). பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றிவரும் இவா், சனிக்கிழமை நள்ளிரவு 4ஆம் ரயில்வே கேட் அருகே பக்கிள் ஓடைப் பாலம் மங்களபுரம் விலக்கில் தனது பைக்கில் நண்பருடன் சென்றாராம்.
அப்போது, அவா்கள் மீது காா் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். பின்னா், அந்தோணி தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.