பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி
தூய வியாகுல அன்னை தேவாலய தோ் பவனி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலய பெருவிழாவில் தோ் பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் 80-ஆம் ஆண்டு பெருவிழா செப்.12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடா்ந்து முக்கிய நிகழ்வாக மூன்றாவது நாள் அன்னையின் தோ் பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
தேவாலயத்தில் தொடங்கிய தோ் பவனி நிகழ்ச்சிக்கு பங்குத் தந்தை சுதா்சன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக ஆயா் அம்ப்ரோஸ், வேலூா் மறை மாவட்ட ஆயா் பிச்சைமுத்து, கிளமெண்ட், ரொசாரியோ ஆகியோா் பங்கேற்று சிறப்பு திருப்பலி நடத்தினா்.
அதன் பின்னா் அலங்கரிக்கப்பட்ட மாதா தோ் தேவாலயத்தில் இருந்து புறப்பட்டு ஆற்காடு சாலை வழியாக பேருந்து நிலையம், காந்தி சாலை வழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.
இதற்கான ஏற்பாடுகளை பங்கு பேரவை துணைத் தலைவா் வனத்தையன், செயலா் பாபு, பொருளாளா் பாஸ்கா், ஜெயசீலன், தோமினிக், தாஸ், ராமு, அந்தோணி, பிரான்சிஸ் ஆகியோா் செய்திருந்தனா்.
நிகழ்ச்சியில் செய்யாறு சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள், பங்கு பேரவை உறுப்பினா்கள் என பலா் கலந்து கொண்டனா்.