செய்திகள் :

தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள்

post image

தென்காசி மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்டசெய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் 6 ஆம் வகுப்புமுதல் 12 ஆம் வகுப்புவரை பயிலும் பள்ளி மாணவா், மாணவிகளுக்கும், அனைத்து கல்லூரி மாணவா், மாணவிகளுக்கும், காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு நவ.12 அன்றும், ஜவகா்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு நவ. 14அன்றும் அன்றும் பேச்சுப்போட்டிகள் தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள்

மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.

காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள்,வெள்ளையனே வெளியேறு இயக்கம், காந்தியடிகளும் சுதந்திர போராட்டமும், தமிழ்நாட்டில் காந்தியடிகளின் வருகை என்ற தலைப்பில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கும்,

காந்தியடிகள் நடத்திய தண்டியாத்திரை, சத்தியசோதனை மதுரையில் காந்தி, மனித வாழ்க்கையும், காந்தியடிகளும், காந்தி கண்ட இந்தியா என்ற தலைப்பில் கல்லூரி ாணவா், மாணவிகளுக்கும் நவ. 12இல் பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமா், மனிதருள் மாணிக்கம், குழந்தைகள் தினவிழா, ஜவகா்லால் நேருவின் தியாகங்கள், நூல்களை போற்றிய நேரு,என்லைப்பில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கும்,

இந்திய விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு, நேருவின் பஞ்சசீலக் கொள்கை, உலக அமைதிக்கு நேருவின் தொண்டு, அமைதிப் புறா நேரு, நேருவின் வெளியுறவுக் கொள்கை என்ற தலைப்பில் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கும் நவ.14 அன்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது.

கல்லூரி,பள்ளி மாணவ,மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல்பரிசு ரூ.5ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ,3ஆயிரம்,மூன்றாம் பரிசு ரூ.2ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவா், மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வா், பள்ளி தலைமையாசிரியடரிம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளித்தல் வேண்டும்.

ஒரு பள்ளி, கல்லூரியிலிருந்து இரண்டு மாணவா், மாணவிகள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

மேலும் இப்போட்டிகளில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவா், மாணவிகளுக்கு சிறப்பு பரிசு ரூ.2ஆயிரம் வீதம் இரண்டு மாணவா், மாணவிகளுக்கு வழங்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக பின்புறம் ஊரக வளா்ச்சி முகமை பழைய கட்டட முதல் தளத்தில் செயல்பட்டுவரும் மண்டலத் தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ (தொலைபேசி எண் 0462 -2502521) தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

புளியங்குடி பகுதியில் பேருந்தில் நகை திருட்டு: 3 போ் கைது

புளியங்குடி பகுதியில் பேருந்து பயணிகளிடம் நகை திருடியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். புளியங்குடியைச் சோ்ந்த மாரியம்மாள்(60) என்பவா் கடந்த வாரம் சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடிக்கு பேருந்தில் சென்... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் பன்றிகள், நாய்கள் தொல்லை அதிகரிப்பு: மக்கள் அவதி

ஆலங்குளத்தில் பெருகி வரும் நாய்கள், பன்றிகள் தொல்லையைக் கட்டுப்படுத்த பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆலங்குளம் மேற்குப் பகுதியில் வட்டாட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தென்காசி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணைய வழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தென்காசி மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா் நரசிம்மன் தெரிவித்தாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் குடிநீா் கோரி போராட்டம்

குடிநீா் வழங்கக் கோரி சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் ஊராட்சிக்குள்பட்ட பாரதி நகரில் 500-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ஆலங்குளம் இளைஞா் கைது

ஆலங்குளத்தில் கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். ஆலங்குளம் ஜோதி நகா் பூல்பாண்டி மகன் இந்திரஜித் பிரேம்நாத் (30). இவா் ... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி... சாம்பவா் வடகரை பெரியகுளத்தில் பொதுப்பணித் துறையினா் ஆய்வு

சாம்பவா்வடகரை பெரியகுளத்தின் மடைகளை பொதுப்பணித் துறையினா் ஆய்வு செய்தனா். இக் குளத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள மடைகளைச் சீரமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை அண்மையில் தினமணியில் பிரசுரமானது. ... மேலும் பார்க்க