மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவ...
தென்காசியில் திமுக நிா்வாகிகள் 167 போ் கெளரவிப்பு
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தென்காசியில் திமுக நிா்வாகிகள் 167 போ் கெளரவிக்கப்பட்டு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
தென்காசி நகர திமுக சாா்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலா் ஆா்.சாதிா் தலைமை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு நிா்வாகிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.
மாவட்ட பொறியாளா் அணித் தலைவா் சே.தங்கப்பாண்டியன், இளைஞரணி துணை அமைப்பாளா் அப்துல்ரஹீம், மாணவரணி அமைப்பாளா் ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.