தென்னாப்பிரிக்கா - ஆஸி. போட்டி: மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு டாஸ் சுண்டுவது தாமதமாகியுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. ராவல்பிண்டியில் மழை பெய்து வருவதால் போட்டிக்கான டாஸ் சுண்டப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க: விராட் கோலியின் சதத்துக்காக மனித கால்குலேட்டராக மாறிய அக்ஷர் படேல்!
குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா 2 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இன்றையப் போட்டி இரண்டு அணிகளுக்குமே மிகவும் முக்கியமான போட்டியாகும்.
குரூப் ஏ பிரிவில் ஏற்கனவே இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.