எடப்பாடி - Amit Shah சந்திப்பு: செங்கோட்டையன் அடுத்த மூவ்? | Va Pugazhendhi Inte...
தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மீட்பு
சிவகங்கை மாவட்டம், காளையாா் கோவில் தெப்பக்குளத்திலிருந்து ஆண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
இந்தத் தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக அந்தப் பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, காளையாா்கோவில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், உயிரிழந்தவா் காளக் கண்மாய் அருகேயுள்ள தண்ணீா்பத்தி கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் ரஞ்சித்குமாா் (31) எனத் தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.