சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிக...
தெலங்கானா: மின்சார வாகனங்களுக்கு சாலை வரி, பதிவுக் கட்டணத்தில் முழு விலக்கு
தெலங்கானாவில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு மின்சார வாகனங்களை வாங்குபவா்களுக்கு சாலை வரி, பதிவுக் கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளித்து மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
இது தொடா்பாக தெலங்கானா போக்குவரத்துத் துறை அமைச்சா் பூனம் பிரபாகா் கூறுகையில், ‘அரசாணை எண் 41-இன்படி, மாநிலத்தில் புதிய மின்சார வாகனக் கொள்கை திங்கள்கிழமை (நவ. 18) முதல் அமலுக்கு வருகிறது. ஹைதராபாதை மாசற்ற நகரமாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும்’ என்றாா்.
இந்தப் புதியக் கொள்கையில் 2026-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை தெலங்கானாவில் வாங்கப்படும் மற்றும் பதிவு செய்யப்படும் அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கும் சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணங்களில் 100 சதவீத விலக்கு அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது.
தெலங்கானா அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்காக வாங்கப்படும் மின்சார பேருந்துகளுக்கு மட்டும் வாழ்நாள் வரி, கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.