ஆர்ஜி கர் பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் பிரதமர் தலையிட கோரிக்கை!
தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ: ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்!
விராலிமலை தேங்காய் நார் உற்பத்தி தொழிற்சாலையில் வியாழக்கிழமை நள்ளிரவு தீ விபத்தில் ரூ.7 லட்சம் மதிப்பிலான தேங்காய் மட்டைகள் எரிந்து நாசமானது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள ஆண்டியப்பிள்ளை பட்டியில் ஆர். எஸ். ஆர் என்ற பெயரில் தேங்காய் நார் உரித்து கயிறு தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வெளிச்சந்தைகளில் இருந்து தேங்காய் மட்டைகள் வாங்கி அதை இயந்திரம் மூலம் நாராக்கி அதன் மூலம் கயிறு தயாரித்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த தொழிற்சாலையில் சேமித்து வைக்கபட்டிருந்த தேங்காய் மட்டைகள் வியாழக்கிழமை நள்ளிரவு திடீரென தீப்பற்றியுள்ளது. தீ மள மளவென்று தொழிற்சாலை முழுவதும் பரவி எரியத்தொடங்கியுள்ளது.
நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி
இதுகுறித்து அங்கிருந்த தொழிலாளர்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலையிலான வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினர். இருப்பினும், தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மேலும் ஒரு தீயணைப்பு வாகனத்தை அனுப்புமாறு கீரனூர் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு கூறியதை தொடர்ந்து அங்கிருந்து மற்றொரு தீயணைப்பு வாகனம் வந்ததைத் தொடர்ந்து இரண்டு வண்டிகளில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக விடிய விடிய போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் மூலப்பொருள்கள், தேங்காய் மட்டைகள், மின் மோட்டார், கன்வேயர் பெல்ட் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ. 7 லட்சம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.