Deepika: ``நான் தான் பிரேக் அப் செய்தேன்; இப்போது அவர் ஸ்டார்'' - முன்னாள் காதலன...
தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் ‘ஃபேஷன் ஷோ’
தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் பயின்ற மாணவ, மாணவிகளின் ‘ஃபேஷன் ஷோ’ நடைபெற்றது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதியில் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில்(என்ஐஎஃடி) பயின்று பட்டம் பெற்ற 283 மாணவ, மாணவிகளின் ஆடை அணிவகுப்பு (ஃபேஷன் ஷோ) நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் விதவிதமான ஆடைகளை அணிந்துவந்து ஒய்யாரமாக நடைபோட்டனா். இது பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை செயலா் லட்சுமி பிரியா, தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் இயக்குநா் ஜெனரல் தனு காஷ்யப், சென்னை தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் இயக்குநா் திவ்யா சத்தியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மேலும், இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆடைகள் அலங்கார பொருள்களை வடிவமைத்து அதைக் காட்சிப்படுத்தி இருந்தனா்.