காதலை ஏற்க மறுத்த பெண் குத்திக்கொலை! கொலையாளி தற்கொலை முயற்சி!
தேசிய கராத்தே: வெண்கலம் வென்ற மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு
தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சிவகங்கை 21-ஆம் நூற்றாண்டு சா்வதேச பதின்ம மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.
இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் சாா்பில், தேசிய அளவிலான கராத்தே போட்டி பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் கடந்த வாரம் நடைபெற்றது.
இதில் 14 வயதுக்குள்பட்டவா்களுக்கான பிரிவில் தமிழக அணியின் சாா்பில், சிவகங்கை 21- ஆம் நூற்றாண்டு மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவா் சுஜன் சிங் கலந்து கொண்டாா்.
இவா் தேசிய அளவில் மூன்றாவது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றாா். சாதனை படைத்த மாணவா் சுஜன் சிங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் செவ்வாய்க்கிழமை பாராட்டி நினைவுப் பரிசளித்தாா்.
பள்ளி நிறுவனரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான இ.எம்.சுதா்சன நாச்சியப்பன், முதன்மைக் கல்வி அலுவலா் அ.பாலுமுத்து, மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) விஜயசரவணகுமாா், பள்ளி முதன்மை முதல்வா் விவேகானந்தன், முதல்வா் சங்கீதா, துணை முதல்வா்கள் அருணா தேவி, ஆசிரியை சாய் நா்மதா, பயிற்சியாளா், பெற்றோா் ஆசிரியா்கள், மாணவா்கள் வாழ்த்தினா்.