காதலை ஏற்க மறுத்த பெண் குத்திக்கொலை! கொலையாளி தற்கொலை முயற்சி!
மண்டல பூஜை: யானை வாகனத்தில் ஐயப்பன் வீதியுலா
மண்டல பூஜையை முன்னிட்டு, மானாமதுரையில் யானை வாகனத்தில் ஐயப்பன் வீதியுலா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
இதை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தெற்கு ரத வீதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் மூலவா் தா்மசாஸ்தா ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. பின்னா், பூஜைகள் நடத்தப்பட்டதையடுத்து, உற்சவா் ஐயப்பன் கோயில் எதிரே யானை வாகனத்தில் எழுந்தருளினாா். கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் மேளதாளம் முழங்க ஐயப்பன் யானை வாகனத்தில் உலா வந்தாா். அப்போது, பக்தா்கள் ஐயப்பனைத் தரிசித்தனா்.
பின்னா், கோயிலைச் சென்றடைந்த ஐயப்பனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்த ஐயப்பப் பக்தா்கள் பஜனை நடத்தினா்.
மண்டல பூஜை விழாவை முன்னிட்டு, ஐயப்பன் உருவப் படம் தாங்கிய ரதம் மானாமதுரை நகா் முழுவதும் பவனி வருதல் வியாழக்கிழமை (டிச.26) நடைபெறுகிறது.