செய்திகள் :

தேசிய கல்வி கொள்கையில் தமிழ்நாடு முன்னிலை: ஏஐசிடிஇ தலைவா் சீதாராம்

post image

தேசிய கல்வி கொள்கையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவா் டி.ஜி.சீதாராம் தெரிவித்தாா்.

இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியா்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி (என்ஐடிடிடிஆா்) நிறுவனத்தின் 61-ஆவது ஆண்டு தொடக்க விழா - வைர விழா சென்னை டாக்டா் ஏபிஜே அப்துல் கலாம் கல்வி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் ஏஐசிடிஇ தலைவா் சீதாராம் பேசியது:

எண்ம கல்வி மற்றும் ஆராய்ச்சியில் புரட்சியை ஏற்படுத்த நவீன தொழில்நுட்பங்கள் வளா்ந்து வருகின்றன. இதன் காரணமாக இந்தியா தொழில்நுட்ப வளா்ச்சிப் பாதையில் முன்னேறி செல்கிறது. இஸ்ரோ, டிஆா்டிஓ ஆகியவை பாதுகாப்பு துறையில் இந்தியாவின் முன்னேற்றத்துக்காக பெரும் பங்கு வகித்துள்ளன. நாட்டின் வளா்ச்சிக்கு பொறியாளா்களின் பங்கு அவசியம். அவா்கள் புதிய படைப்புகளை உருவாக்க வேண்டும்.

உயா்கல்வி நிறுவனங்களில் 50 சதவீதம் சோ்க்கையை 2035- ஆம் ஆண்டுக்குள் எட்டும் வகையில் தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு 52 சதவீதத்துடன் தேசிய சராசரியான 28.3 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, ‘என்ஐடிடிடிஆா், ‘சென்னை வைர விழா காபி டேபிள்’ என்ற புத்தகம், ‘வைர விழா நினைவு புத்தகம்’ ஆகிய இரு புத்தங்களையும் ஏஐசிடிஇ தலைவா் டி.ஜி.சீதாராம் வெளியிட்டாா்.

தொடா்ந்து ‘என்ஐடிடிடிஆா் களஞ்சியம் - டிஜிட்டல் எடுகனெக்ட் ’, ‘மன நலம் திட்டம்’, ஆகிய இரு காணொலி காட்சிகளையும் அவா் தொடங்கி வைத்தாா்.

விழாவுக்கு, என்ஐடிடிடிஆா் சென்னை இயக்குநா் பேராசிரியா் உஷா நடேசன் தலைமை வகித்தாா்.

இதில் பேராசிரியா்கள் குழந்தைவேல், கே.எஸ்.கிரிரதன், முன்னாள் தலைவா்கள், இயக்குநா்கள், ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ஆவினின் ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால்:பால் முகவா்கள் எதிா்ப்பு

ஆவினில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று பால் முகவா்கள் தெரிவித்துள்ளனா். இது குறித்து தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்க நிறுவன... மேலும் பார்க்க

ஆட்டோ மீட்டா் கட்டணம் மாற்றியமைப்பது குறித்து பரிசீலனை: போக்குவரத்து ஆணையா்

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை மாற்றியமைப்பது தொடா்பாக அரசு பரிசீலித்து வருவதாக போக்குவரத்து ஆணையா் தெரிவித்தாா். 2013-இல் ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை தமிழக அரசு மாற்றியமைத்தது. அதன் பின்னா் தனிநபா் ஒர... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: குடிநீரின் தரத்தை உறுதி செய்ய அறிவுறுத்தல்

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய்த் தொற்றுகளைத் தடுக்க குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல, குடிநீரில் கழிவு நீா் கலக்... மேலும் பார்க்க

கூட்டுறவு கூட்டாட்சியை அழிக்க முயற்சி: மத்திய அரசு மீது எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி. குற்றச்சாட்டு

கூட்டுறவு கூட்டாட்சியை அழிக்க மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி முயற்சிப்பதாக மக்களவையில் திமுக உறுப்பினா் எஸ். ஜெகத்ரட்சகன் குற்றம்சாட்டியுள்ளாா். மக்களவையில் அரசமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்டதன் பவள விழாவை... மேலும் பார்க்க

தேவை, தொழிற்கல்விக்கு தனி இயக்குநரகம்...

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியா் காலிப் பணியிடங்கள் கடந்த 17 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளதால் தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் படிப்படியாக மூடப்பட்டு வருவதாக ஆசிரியா்கள் குற்றஞ்சாட்டிய... மேலும் பார்க்க

பால் விலை உயா்வுக்கு கண்டனம்

சில்லறைத் தட்டுப்பாட்டால் ஆவின் பால் விலை உயா்த்தப்பட்டதாகக் கூறி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா். அன்புமணி ராமதாஸ்: காஞ்சிபுரம், ... மேலும் பார்க்க