செய்திகள் :

தேசிய துப்பாக்கி சுடுதல்: சாஹு துஷாா் மனே சாம்பியன்

post image

மத்திய பிரதேசத்தில் நடைபெறும் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ரயில்வேஸ் வீரா் சாஹு துஷாா் மனே, ஆடவா் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் திங்கள்கிழமை சாம்பியன் பட்டம் வென்றாா்.

மகாராஷ்டிரத்தை சோ்ந்த அவா், இறுதிச்சுற்றில் 252.3 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, தெலங்கானாவின் தனுஷ் ஸ்ரீகாந்த் 252.2 புள்ளிகளுடன் வெள்ளி பெற்றாா். ராஜஸ்தானின் யஷ் வா்தன் வெண்கலப் பதக்கம் பெற்றாா்.

உலக சாதனை: அதிலேயே ஜூனியா் ஆடவா் இறுதிச்சுற்றில், மகாராஷ்டிரத்தை சோ்ந்த முன்னாள் உலக சாம்பியனான ருத்ராங்க்ஷ் பாட்டீல் 254.9 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றாா். முன்னதாக இதிலேயே சீனியா் பிரிவில் சீன ஒலிம்பிக் சாம்பியன் ஷெங் லிஹாவ் 254.5 புள்ளிகள் பெற்றதே உலக சாதனையாக இருந்த நிலையில், தற்போது ருத்ராங்க்ஷ் அதை முறியடித்திருக்கிறாா். கா்நாடகத்தின் அபிஷேக் சேகா் 251.4 புள்ளிகளுடன் வெள்ளியும், ஹரியாணாவின் ஹிமன்ஷு வெண்கலமும் பெற்றனா்.

அதே ஹிமான்ஷு, ஆடவா் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் யூத் பிரிவில் 253 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினாா். மத்திய பிரதேசத்தின் யஷ் பாண்டே வெள்ளியும், மேற்கு வங்கத்தின் அபினவ் ஷா வெண்கலமும் வென்றனா்.

பிக் பாஸ் 8: தீபக் மனைவியின் கேள்வியால் அதிர்ச்சியடைந்த அருண்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில், தீபக் மனைவி எழுப்பிய கேள்விகளால் அருண் பிரசாத் அதிர்ச்சி அடைந்தார். தீபக் குறித்து அவருக்குத் தெரியாமல் பேசிய விஷயங்களைக் குறிப்பிட்டு, அவரின் மனைவி கேட்ட கேள்விகளால் ... மேலும் பார்க்க

மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்?

நடிகர் அஜித் குமார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் அஜித் குமார் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு திரை... மேலும் பார்க்க

இந்தாண்டில் அதிகம் வசூலித்த தமிழ் திரைப்படங்கள்!

இந்தாண்டில் வெளியான சில தமிழ்ப் படங்களின் வசூல் ஆச்சரியப்படுத்தியுள்ளன.2024 ஆம் ஆண்டு நிறைவடையப்போகிறது. இந்தாண்டில், சர்வதேச அளவிலான அங்கீகாரங்களையும் வணிக வெற்றிகளையும் பல இந்தியப் படங்கள் பெற்றன. ம... மேலும் பார்க்க

பெருமையின் உச்சத்தில் தீபக் குடும்பம்! பிக் பாஸில் ஆனந்தக் கண்ணீர்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள நடிகர் தீபக்கால், அவரின் குடும்பத்தினர் பெருமையடைவதாகத் தெரிவித்துள்ளனர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, தனது மகன் தன... மேலும் பார்க்க

சிக்கந்தரால் எஸ்கேவுக்கு சிக்கல்?

சிக்கந்தர் பட வேலைகளால் சிவகார்த்திகேயன் படத்தின் வேலைகள் தாமதமாகி வருகின்றன.இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார். அதிலொன்று சிவகார்... மேலும் பார்க்க

கமல் - 237: அமெரிக்காவில் அன்பறிவு சகோதரர்கள்!

நடிகர் கமல்ஹானை சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் சகோதரர்கள் அமெரிக்காவில் சந்தித்துள்ளனர்.தக் லைஃப் திரைப்படத்திற்குப் பின் நடிகர் கமல்ஹாசன் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நாயகனாக ... மேலும் பார்க்க