'நீங்கள் சொல்லித்தானே ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கினோம்' - அமெரிக்காவை சாடும்...
தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் துறையில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ, ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு தகுதியானவர்கள் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வு கலந்துகொண்டு பயன்பெறலாம்.
அறிவிப்பு விளம்பர எண்: NITT/Project/DRDO/ECE/HK12
பணி: Junior Research Fellow, Project Associate (I & II)
காலியிடம்: 1
சம்பளம்: ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கு மாதம் ரூ.31,000 + எச்ஆர்ஏ, ப்ராஜெக்ட் அசோசியேட்-I பணிக்கு மாதம் ரூ.25,000 + எச்ஆர்ஏ, ப்ராஜெக்ட் அசோசியேட்-II பணிக்கு மாதம் ரூ. 28,000 +எச்ஆர்ஏ
வயது வரம்பு: ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கு 28 வயதிற்குள்ளும், ப்ராஜெக்ட் அசோசியேட்-I பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் கம்யுனிகேசன் பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ப்ராஜெக்ட் அசோசியேட் -II பணிக்கு 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடை பெறும் நாள்: 26.8.2025
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Electronics & Communication Department, NIT, Trichy
விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் பயோடேட்டா ஆகியவற்றை இணைத்து நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு hemant@nitt.edu என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.