மதுரை எஸ்.ஆலங்குளம்: `வீட்டுக்கு வெளிய சாக்கடை இருக்கலாம்; வீடே சாக்கடையா இருந்த...
ரைட்ஸ் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
மத்திய அரசின் கட்டுப்பாடின் கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். No: CL/07-R1/25
பணி: Technical Assistant
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.29,735
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், மெட்டார்ஜிகல் Metallurgical பிரிவில் டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28.3.2025 தேதியின்படி 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Technical Assistant
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ.29,735
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28.3.2025 தேதியின்படி 40-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தமிழ்நாட்டில் சென்னையில் வைத்து தேர்வு நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.300. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர்களுக்கு ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://rites.com/career என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.8.2025
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.