மே 9 கலவரம்! முன்னாள் பிரதமருக்கு பிணை வழங்கிய பாக். உச்சநீதிமன்றம்!
தவெக மாநாட்டிற்கு செல்லும் வழியில் தொண்டர் பலி!
மதுரை தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு செல்லும் வழியில் தொண்டர் ஒருவர் மாரடைப்பால் பலியானார்.
தவெக மாநாட்டிற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட பிரபாகரன் என்பவர் சக்கிமங்கலம் என்ற இடத்தில் சிறுநீர் கழிக்க சென்றபோது மயக்கமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பலியானார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வியாழக்கிழமை இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 2.5 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்,
காலை 10 மணி மாநாட்டு பந்தலில் உள்ள அனைத்து இருக்கைகளும் நிரம்பின. கடும் வெய்யில் காரணமாக மயக்கமடைந்த தொண்டர்கள் 10 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மதுரை அரசு மருத்துவமனையிலும், . 9 பேர் வளையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தவெக மாநாட்டிற்கு சென்றவர் மாரடைப்பால் பலியான சம்பவம் தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: தவெக 2வது மாநில மாநாடு தொடங்கியது: இளைஞர்கள் கூட்டத்தால் திணறும் மதுரை!