செய்திகள் :

பாரபத்தியில் தவெக மாநாடு! பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை!!

post image

மதுரை: நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் தொடங்கியிருக்கும் நிலையில், சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெக மாநாடு காரணமாக, சாலைகளில் கடும் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகரம் முழுவதும் சாலைகள், வாகனங்களால் நிரம்பி வழியும் நிலையில், பள்ளி மாணவர்கள், வீடு செல்ல வசதியாக, அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரபத்தியை ஒட்டியிருக்கும் 3 கிராமங்களில் முற்பகலோடு பள்ளிகள் நிறைவு பெற்றுள்ளது. அதாவது, எலியார்பத்தி, வலையங்குளம், காரியாபட்டியில் உள்ள அரசுப் பள்ளிகள் அரைநாள் விடுமுறை அறிவித்து மாணவர்களை விரைவாக வீட்டுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மாநாட்டுக்கு வந்த தொண்டர்களின் வாகனங்கள் அவசர வழித்தடத்திலும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. திடலுக்குள் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கும் நிலையில், இன்னமும் லட்சக்கணக்கானோர் மாநாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உள்ளே வரவும், அவர்களது வாகனங்களை நிறுத்தவும் இடமில்லாமல் சாலைகள் நிரம்பி வழிகின்றன.

மாநாடு நடைபெறும் திடலில், பிரமாண்ட மேடை, நடந்து வந்து விஜய் தொண்டா்களை சந்திக்கும் வகையில் நீண்ட நடைமேடை, தொண்டா்கள் அமருவதற்கான நாற்காலிகள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

கடும் வெயில் காரணமாக, மாநாட்டு திடலில் போடப்பட்டிருந்த தரைவிரிப்புகளை தொண்டர்கள் கூரை போல பிடித்துக் கொண்டார்கள். சில இளைஞர்கள் குழந்தைகளுடன் மாநாட்டுக்கு வந்திருப்பதால் குழந்தைகளும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியும் நடந்தது. மற்றொரு பக்கம், அருகில் உள்ள மரங்களின் இலைகளை உடைத்து தொண்டர்கள் தலை மீது வைத்துக்கொண்டு வெய்யிலிருந்து தற்காத்துக் கொள்ள முயன்று வருகிறார்கள்.

தவெக மாநாடு இன்று காலை தொடங்கி, இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோா் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுவதால், சுமாா் 506 ஏக்கா் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், கொடூர வெய்யில், தவெக தொண்டர்களுக்கு கடும் சவாலாக மாறிப்போனது.

மேற்கூரை இல்லாததால், காலை முதலே மாநாட்டுக்கு வருகை தந்த இளைஞர்கள் பலரும் வெய்யில் காரணமாக மயக்கமடைந்து வருவதாகவும் அவர்களுக்கு முதலுதவி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுவரை 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தவெக மாநாட்டுக்கு விஜய் வருகை! புறப்பட்ட தொண்டர்கள்!!

திருப்பரங்குன்றம்: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் தொடங்கியது. விழா நடைபெறும் மேடைக்கு கட்சித் தலைவர் விஜய் வந்த நிலையில், அவரைப் பார்த்ததும், மாநாட்டுக்கு வந்திர... மேலும் பார்க்க

2026-ல் ஏலியன்களை சந்திக்கப் போகும் மனிதர்கள்! அது மட்டுமா?

வரும் 2026ஆம் ஆண்டு இயற்கைப் பேரிடர்களால் உலகம் பாதிக்கப்படவிருப்பதாக, பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா கணித்துள்ளார்.கடந்த 1996ஆம் ஆண்டே அவர் மறைந்துவிட்டாலும், உலகில் நடக்கவிருக்கும் பல நிகழ்வுகளை அ... மேலும் பார்க்க

பெரியாரின் பேரன்... தவெக மாநாட்டில் விஜய்யின் குரலில் ஒலிக்கும் கொள்கைப் பாடல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில் விஜய்யின் குரலில் உருவான, அக்கட்சியின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின், 2-வது மாநில மாநாடு இன்று (ஆக.21) நடைபெற்ற... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: புதுச்சேரி- விழுப்புரம் பயணிகள் ரயில்கள் 7 நாள்களுக்கு ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம்-புதுச்சேரி பயணிகள் ரயில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் 7 நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோ... மேலும் பார்க்க

தவெக மாநாட்டு மேடைக்கு வந்தார் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாட்டு மேடைக்கு அந்தக் கட்சியின் விஜய் வருகை தந்துள்ளார்.மாநாடு மாலைக்கு மேல் துவங்கும் என்று கூறி இருந்த பொழுதும் சென்னை, கோவை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, தூத்துக... மேலும் பார்க்க

தவெக மாநாட்டில் ஒலித்த பாடல்கள்!

மதுரையில், தமிழக வெற்றிக் கழகத்தின், 2-வது மாநில மாநாட்டில் விஜய்யின் பிரபல திரைப்பட பாடல்கள் ஒலிப்பரப்பு செய்யப்பட்டன. மதுரையில் நடிகர் விஜய்யின் தலைமையிலான, தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநா... மேலும் பார்க்க