LIVE : TVK Madurai Maanadu | Vijay Speech, Aadhav Arjuna Speech | மதுரை தவெக மாந...
லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி வெளியீட்டுத் தேதி!
நடிகர் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் டிராகன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
முழுநீள காதல், நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ள இதில் எஸ்ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நீண்ட நாள்களாகத் தயாரிப்பிலிருக்கும் இப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் வெளியீட்டுத் தேதியை மாற்றி தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: துல்கர் சல்மானுடன் நடிக்கும் ஷ்ருதி ஹாசன்!