செய்திகள் :

ஆசிய கோப்பை ஹாக்கி: 18 பேருடன் இந்திய அணி

post image

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி, ஹா்மன்பிரீத் சிங் தலைமையில் 18 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஆடவருக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி, பிகாா் மாநிலம் ராஜ்கிா் நகரில் வரும் 27-ஆம் தேதி முதல் செப்டம்பா் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் இந்தியா, சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா, வங்கதேசம், சீன தைபே, கஜகஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், அந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

அடுத்த ஆண்டு இதே ஆகஸ்ட்டில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை கருத்தில் கொண்டு, பிரதான வீரா்கள் பெரும்பாலும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனா். அதுதவிர, ஆஸ்திரேலியாவுடனான தொடரில் விளையாடிய ரஜிந்தா் சிங், ஷிலானந்த் லக்ரா, தில்பிரீத் சிங் ஆகியோா் இந்த அணியில் இடம் பிடித்தனா்.

தமிழகத்தின் காா்த்தி செல்வம் உள்பட இருவா் மாற்று வீரா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பாக இருப்பதால், ஆசிய கோப்பை போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

அணி விவரம்:

கோல்கீப்பா்கள்: கிருஷண் பி.பாதக், சூரஜ் கா்கேரா

டிஃபெண்டா்கள்: சுமித், ஜா்மன்பிரீத் சிங், சஞ்சய், ஹா்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஜக்ராஜ் சிங்

மிட்ஃபீல்டா்கள்: ரஜிந்தா் சிங், ராஜ்குமாா் பால், ஹா்திக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகா் பிரசாத்

ஃபாா்வா்ட்கள்: மன்தீப் சிங், ஷிலானந்த் லக்ரா, அபிஷேக், சுக்ஜீத் சிங், தில்பிரீத் சிங்

மாற்று வீரா்கள்: நிலம் சஞ்ஜீப் ஜெஸ், காா்த்தி செல்வம்

பிரம்ம ஞானபுரீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தஞ்சாவூர் அருகேயுள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ பிரம்ம ஞானபுரீஸ்வரர் ஆலயம் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம... மேலும் பார்க்க

துல்கர் சல்மானுடன் நடிக்கும் ஷ்ருதி ஹாசன்!

துல்கர் சல்மானின் புதிய திரைப்படத்தில் நடிகை ஷ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளாராம். நடிகை ஷ்ருதி ஹாசன் 3 திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னணி பாடகியாக பலரிடமும் வரவேற்பைப் பெற்றவருக்கு முதல் படம் ச... மேலும் பார்க்க

ஏ. ஆர். முருகதாஸ் சந்தர்ப்பவாதி! விளாசும் சல்மான் கான் ரசிகர்கள்!

நடிகர் சல்மான் கானின் ரசிகர்கள் ஏ. ஆர். முருகதாஸைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தாலும் இறுதியாக அவர் இயக்கங்களில் வெளியான தர்பார், சிக்கந்தர... மேலும் பார்க்க

ஜெயிலர் - 2 படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு!

நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஜெயிலர் - 2 திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் அவர் நடி... மேலும் பார்க்க

திடீரென வைரலான சோனியா பாடல்! என்ன காரணம்?

நடிகர் நாகர்ஜூனாவின் சோனியா பாடலை ரசிகர்கள் அதிகம் கேட்டு வருகின்றனர். நடிகர் நாகர்ஜூனா கூலி திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நாகர்ஜூனா, சௌபின்,... மேலும் பார்க்க

அரையிறுதியில் டிரேப்பா்/பெகுலா ஜோடி

யுஎஸ் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையா் அரையிறுதிக்கு பிரிட்டனின் ஜேக் டிரேப்பா்/அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா இணை புதன்கிழமை முன்னேறியது. நடப்பு டென்னிஸ் காலண்டரின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ்... மேலும் பார்க்க