மதுரை எஸ்.ஆலங்குளம்: `வீட்டுக்கு வெளிய சாக்கடை இருக்கலாம்; வீடே சாக்கடையா இருந்த...
தவெக மாநாடு: தொண்டர்கள் 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!
மதுரை தவெக மாநாட்டுக்கு சென்ற தொண்டர்கள் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வியாழக்கிழமை இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 2.5 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்,
சுமார் 506 ஏக்கா் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேடை, விஜய் தொண்டர்களை நடந்து வந்து சந்திக்கும் வகையில் நீண்ட நடைமேடை, தொண்டர்கள் அமருவதற்கான நாற்காலிகள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் 200 ஏக்கர் பரப்பிலும், 306 ஏக்கர் பரப்பில் வாகன நிறுத்துமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டுத் திடலைச் சுற்றிலும் 200-க்கும் மேற்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தொண்டா்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர்த் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குழாய்கள் மூலமும் குடிநீர் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்ட நடமாடும் கழிப்பறைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
காலை 10 மணி அளவில் மாநாட்டு பந்தலில் உள்ள அனைத்து இருக்கைகளும் நிரம்பின. கடும் வெய்யில் காரணமாக தரை விரிப்புகளை கிழித்து தற்காலிக கூடாரம் அமைத்து தங்களை தற்காத்துக் கொண்டு வருகின்றனர்.
சிலர் இருக்கைகளை நிழற்குடை போல் மாற்றி தலையில் பிடித்துக் கொண்டுள்ளனர்.
கடும் வெய்யில் காரணமாக மயக்கமடைந்த தொண்டர்கள் 10 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் வளையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், ஒருவர் மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: 10-க்கும் மேற்பட்டோர் மயக்கம்! முன்கூட்டியே தொடங்கும் தவெக மாநாடு!