செய்திகள் :

தவெக மாநாட்டில் குவிந்த 2 லட்சம் பேர்! விஜய் சொல்லைக் கேட்காத தொண்டர்கள்?

post image

தவெக மாநாடு நடைபெறும் மதுரை பாரபத்தியில் கடும் வெயில் தகிப்பதால் தொண்டர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இப்போதே சுமார் 2 லட்சம் பேர் குவிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என்று தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் காலையிலேயே மாநாட்டுக்கு வந்திருந்த பல தொண்டர்களும் தங்களது கைக்குழந்தைகளுடன் வந்திருந்ததைக் காண முடிந்தது. குழந்தைகள் சுட்டெரிக்கும் வெயிலில் அழுதுகொண்டே இருந்தன.

ஏற்கனவே, மாநாட்டுக்காக அமைக்கப்பட்டிருந்த வாகன நிறுத்துமிடங்கள் நிரம்பி விட்டதால், சாலையிலேயே வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டால்தான், மேற்கொண்டு வாகனங்கள் முன்னேறும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

தொண்டர்கள் மீது டிரோன்கள் மூலம் தண்ணீர் தெளிக்கும் பணியும் நடந்தது. ஆனால், கொளுத்தும் வெயிலில் தெளிக்கும் தண்ணீர் ஆவியாகிப் போனது.

நாலாபுறமும் இருந்து வரும் தொண்டர்களுக்கு இடமளித்து அமர வைக்கவும், வெய்யிலால் பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவ முகாம்களுக்கு அழைத்துச் செல்லவும் குடிநீர் கிடைக்காமல் ஆத்திரமடைபவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாவலர்கள் தவிப்பதாகவும் தெரிகிறது.

காலையில் இருந்தே ஏராளமானோர் மாநாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து, முதலுதவி சிகிச்சை பெற்றுள்ளனர்.

மாநாட்டுத் திடலுக்கு அருகே அவசர மருத்துவ வாகன சேவைக்கான சைரன் விடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தொண்டர்கள் அமர மண் தரையில் விரிக்கப்பட்டிருந்த தரை விரிப்புகளை கிழித்து தற்காலிக கூடாரம் அமைத்து தொண்டர்கள் தஞ்சமடைந்தனர். நாற்காலிகளை தலைக்கு மேல் குப்புறக் கவிழ்த்துக்கொண்டு குடையாக பிடித்துக் கொண்ட தொண்டர்களையும் பார்க்க முடிகிறது.

மாநாடு நடைபெறும் திடலில், பிரமாண்ட மேடை, நடந்து வந்து விஜய் தொண்டா்களை சந்திக்கும் வகையில் நீண்ட நடைமேடை, தொண்டா்கள் அமருவதற்கான நாற்காலிகள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், கடும் வெப்பம் தகிப்பதால், தொண்டர்கள் அமர முடியாமல் உள்ளது.

மேலும், விஜய் மாநாட்டுக்குள் வரும்போது, தொண்டர்கள் இரும்பு வேலி மீது ஏறி உள்ளே குதித்து விடக் கூடாது என்பதால், முன்னெச்சரிக்கையாக, இரும்பு வேலிகளுக்கு க்ரீஸ் பூசுப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், தவெக மாநாட்டுக்கு இளைஞர்கள் வந்துகொண்டிருப்பதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தவெக மாநாடு இன்று காலை தொடங்கி, இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோா் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுவதால், சுமாா் 506 ஏக்கா் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தவெக 2வது மாநில மாநாடு தொடங்கியது: இளைஞர்கள் கூட்டத்தால் திணறும் மதுரை!

மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டின் நிகழ்வுகள் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளன. மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி என்ற பகுதியில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் ... மேலும் பார்க்க

பாரபத்தியில் தவெக மாநாடு! பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை!!

மதுரை: நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் தொடங்கியிருக்கும் நிலையில், சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

தவெக மாநாடு: தொண்டர்கள் 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!

மதுரை தவெக மாநாட்டுக்கு சென்ற தொண்டர்கள் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வியாழக்கிழமை இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 2.5 லட்சம் பேர் பங்கே... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,21-08-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தி... மேலும் பார்க்க

ஆக. 26 முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்!

தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் சுமார் 3.05 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆக. 26 ஆம் தேதி சென்னையி... மேலும் பார்க்க

தவெக மாநாடு: 100 டிகிரி வெயில்; டிரோன்கள் மூலம் குடிநீர் விநியோகம்!

தவெக மாநாட்டுத் திடலில் கடும் வெய்யில் காரணமாக தொண்டர்கள் பலர் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் டிரோன்கள் மூலமாக குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநா... மேலும் பார்க்க